கைக்குழந்தையுடன் இருந்த தாய் வெட்டிக் கொலை!! -ஸ்கந்தபுரத்தில் கெடூரம்- - Yarl Thinakkural

கைக்குழந்தையுடன் இருந்த தாய் வெட்டிக் கொலை!! -ஸ்கந்தபுரத்தில் கெடூரம்-

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்கந்தபுரம் பகுதியில் 10 மாத கைக்குழந்தையுடன் இருந்த இளம் குடும்பப் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் 2 ஆம் வாய்க்காலில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அன்ரன் ஜெயராஜ் மேரி அகிலா (வயது -29) என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார்.

கொலை செய்யப்பட் பெண்ணின் கணவர் தொழில் நிமித்தம் வவுனியா சென்றிருந்த வேளை வீட்டில் குழந்தையுடன் இருந்த சமயம் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

அவரது உடலில் காயங்கள் காணப்படுகின்றன. நீதிவான் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரியின் விசாரணையின் பின்னரே மேலதிக தகவல்கள் வெளியிட முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post