ஐ.தே.கவின் தலைவராகும் சஜித்!! - Yarl Thinakkural

ஐ.தே.கவின் தலைவராகும் சஜித்!!

சஜித்தின் தலைமைத்துவத்தை விரும்பி வாக்களித்த 55 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு, ஜ.தே.காவின் தலமை பொறுப்பை ரணில் அவருக்கு வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க நம்பிக்கை தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தேர்தலுக்காக சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்ட விஞ்ஞாபனத்தை அவருக்கு வாக்களித்தவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது புலனாகின்றது.

தற்போது சிலர் கூறுவதைப் போன்று சஜித் பிரேமதாசவுக்கு எமது தரப்பிற்குள் முழுமையான ஆதரவு கிடைக்காமலிருந்திருக்கலாம். ஆனால் தற்போது கடந்ததைப் பேசி பிரயோசனமில்லை. எனவே 55 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப சஜித்தின் தலைமைத்துவத்தின் கீழ் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனினும் சிலர் தனித்து பயணிக்க போவதாகக் கூறுகின்றனர். எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. காரணம் 55 இலட்சம் மக்கள் சஜித்தின் தலைமைத்துவத்தை விரும்பியிருக்கிறார்கள்.

எனவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பதவியை அவருக்கு வழங்குவது மிகப் பொறுத்தமானதாக இருக்கும். ரணில் விக்கிரமசிங்கவும் இதனை புரிந்து கொள்வார் என்று எண்ணுகின்றேன்.

எனவே அவரது ஆசீர்வாதத்துடன் சஜித் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராவார். ஐக்கிய தேசிய கட்சி பிளவு பட வேண்டிய தேவை ஏற்படாது என்றார்.
Previous Post Next Post