யாழ்.பல்கலையில் மாவீரர் தீபம் ஏற்றுவதை தடுக்க முஸ்தீபு!! -அனைவரையும் வெளியேற அறிவிப்பு- - Yarl Thinakkural

யாழ்.பல்கலையில் மாவீரர் தீபம் ஏற்றுவதை தடுக்க முஸ்தீபு!! -அனைவரையும் வெளியேற அறிவிப்பு-

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பிற்பகல் 2 மணியுடன் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெளியேறுமாறு நிர்வாகம் அதிரடி அறிவிப்பினை விடுத்துள்ளது.

ஏற்கனவே அனைத்துப் பீட மாணவர்களுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் தடையையும் மீறி ஏற்கனவே ஏற்பாடு செய்ததற்கு அமைய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இன்று பிற்பகல் 2 மணியுடன் மூடப்படுவதாகவும் அனைத்து உத்தியோகத்தர்களையும் வெளியேறுமாறு தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி பணித்துள்ளார்.
Previous Post Next Post