வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த முல்லை ஊடகவிலாளர் கைது!! - Yarl Thinakkural

வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த முல்லை ஊடகவிலாளர் கைது!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையத்துக்குள் தனது வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்த சுயாதீன ஊடகவியாலளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், டோடன்டுவ பிரதேசத்திலும் இதே குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர்.

வாக்களிப்பு நிலையத்துக்குள் அலைபேசியை எடுத்துச் செல்லவேண்டாம் என்று பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.

இந்த நிலையில் இந்த இருவரும் தமது வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post