வல்வை தீருவில் நினைவாலயத்தை துப்பரவு செய்தவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!! - Yarl Thinakkural

வல்வை தீருவில் நினைவாலயத்தை துப்பரவு செய்தவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!!

யாழ்.வல்வெட்டித்துறை தீருவில் நினைவாலயப் பகுதியை துப்பரவு செய்தவர்கள் பொலிஸாரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

துப்பரவு பணிகளை செய்யும் பொது மக்களையும், அவர்கள் வந்த வாகனத்தையும்  பொலிஸார் வீடியோ எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பில் தாம் அங்கு துப்புரவு பணியில் ஈடுபடுவோரையும் வாகனங்களையும் வீடியோ பதிவு செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபி அமைந்திருந்த நகர சபை பொது மைதானத்தை துப்புரவு செய்யும் பணி வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தலைமையில் ஆரம்பமானது.

அதன்போது நகர சபைக்குச் சென்ற வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொது மைதானத்தை துப்புரவு செய்வதை இடைநிறுத்துமாறு சபைச் செயலாளரிடம் தெரிவித்தார்.

எனினும் தவிசாளரின் முடிவின் அடிப்படையிலேயே துப்புரவு பணி இடம்பெறுவதாகவும் தன்னால் அதனைத் தடுக்க முடியாது என்றும் செயலாளர் பதிலளித்துள்ளார்.

இந்த நிலையில் பொது மைதானத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளோரை ஒவ்வொருவராக வீடியோப் பதிவு செய்து வருகின்றனர்.
Previous Post Next Post