சஜித் வெற்றிபெறாவிட்டால் மீண்டும் இருண்ட யுகம்!! -எச்சரிக்கிறார் ரணில்- - Yarl Thinakkural

சஜித் வெற்றிபெறாவிட்டால் மீண்டும் இருண்ட யுகம்!! -எச்சரிக்கிறார் ரணில்-

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிக்காவிட்டால் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் செல்லும் நிலையேற்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு முழுமையான ஆதரவை வழங்கி, அவரை தேர்தலில் வெற்றி பெறச்செய்வதை நோக்கமாக கொண்டு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து புரிந்துந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்:-
ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச்செய்ய வேண்டும், இல்லையேல் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் செல்லும் நிலையேற்படும்.

நாட்டில் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய அனைத்து மதங்களையும் பாதுகாத்து, முன்நோக்கிப் பயணிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கான தலைமைத்துவத்தை வழங்கத்தக்க வேட்பாளர் சஜித் பிரேமதாசவே ஆவார் என்றார்.
Previous Post Next Post