சிவாஜிலிங்கம் போட்டியில் இருந்து விலக வேண்டும்!! -கோருகிறார் சம்மந்தன்- - Yarl Thinakkural

சிவாஜிலிங்கம் போட்டியில் இருந்து விலக வேண்டும்!! -கோருகிறார் சம்மந்தன்-

ஜனாதிபதி தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கத்தை தேர்தலில் இருந்து விலகிக் கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாவகச்சேரியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.சஜந்தன் தலமையில் நடைபெற்ற அமரர் ரவிராஜ்சின் நினைவு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:-

தம்பி சிவாஜிலிங்கத்திற்கு என்னை நன்றாக தெரியும். அவரையும் நான் நன்றாக அறிந்தவன்.

அந்த வகையில அவரிடம் நான் அன்பாக கேட்டுக் கொள்ளுகின்றேன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு. 

என்னுடைய கோரிக்கையை அவர் தவறாக புரிந்து கொள்ள மாட்டார் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post