யாழ் - சென்னை விமான சேவை இன்று முதல் ஆரம்பம்!! - Yarl Thinakkural

யாழ் - சென்னை விமான சேவை இன்று முதல் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கான விமான சேவை இன்று முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

எயார் எலயன்ஸ் நிறுவனத்தின் விமானமொன்று சென்னையிலிருந்து இன்று காலை 10.35 மணியளவில் புறப்பட்டு பிற்பகல் 12 மணிக்கு யாழ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அவ்விமானம் யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு 2.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தைச் சென்றடைந்தது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னை நகரத்திற்கு முதலாவதாக பயணிக்கும் எயார் எலயன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானத்தில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் யாழ் வணிகர் குழு உள்ளிட்டவர்கள் சென்னைக்கு பயணம்  செய்தமை  குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post