புதுக்குடியிருப்பு விபத்தில் இளைஞர் சாவு!! -மோதிவிட்டு தப்பிய கயஸ்- - Yarl Thinakkural

புதுக்குடியிருப்பு விபத்தில் இளைஞர் சாவு!! -மோதிவிட்டு தப்பிய கயஸ்-

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இன்று மாலை நடந்த விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் 17 ஆம் கட்டையை சேர்ந்த சந்திரன் ஜீவகுமார் (வயது 19) என்பவரே மேற்படி விபத்தில் உயிரிழந்தவராவார்.

குறித்த பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் கயஸ் வாகனம் ஒன்று விதியால் சென்ற துவிச்சக்கர வண்டியை மோதி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இவ்விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோதிவிட்டு தப்பிச் சென்ற கயஸ் வாகனமும், சாரதியும் பொதுமக்களால் துரத்தி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post