கோத்தாவின் வெள்ளை வேன் கடத்தல்கள்!! -சாட்சி இருந்தும் ஏன் நடவடிக்கை இல்லை- - Yarl Thinakkural

கோத்தாவின் வெள்ளை வேன் கடத்தல்கள்!! -சாட்சி இருந்தும் ஏன் நடவடிக்கை இல்லை-

மஹிந்தவின் ஆட்சியில் கோத்தாபாய செய்த வெள்ளை வேன் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பான சாட்சிகள் இருந்தும் இதுவரையில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருந்தமைக்கு அரசாங்கமும் அதன் பங்காளியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்புகூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரட்னவின் ஊடக சந்திப்பில் வெள்ளைவேன் கடத்தல்களும் படுகொலைகளும் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போதைய ஆட்சியாளர்களும், கூட்டமைப்பு ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவும் எத்தகைய நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை பகிரங்கப்படுத்துமாறும் கோரியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post