வாக்களிக்க சென்றவர்களின் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு!! - Yarl Thinakkural

வாக்களிக்க சென்றவர்களின் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு!!

மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம் வாக்காளர்களை வாக்களிப்பதற்காக ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் பேருந்தில் பயணித்தவர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

தாந்திரிமலை - போகொட பாலத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.   குறித்த நபர்கள் கல்வீச்சு தாக்குதலையும் மேற்கொண்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous Post Next Post