அமைச்சர்களுக்கு சிறப்புரிமை இல்லை!! -ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு- - Yarl Thinakkural

அமைச்சர்களுக்கு சிறப்புரிமை இல்லை!! -ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு-

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது பதவிகளே தவிர சிறப்புரிமை இல்லை என்று ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளுக்கான பதவிப் பிரமாண நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இவ்விடயம் தொரட்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

அமைச்சுப் பதவிகள் சிறப்புரிமை அல்ல, பொறுப்பாகும். பொதுமக்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடனே எமதுக்கு பாரிய மக்கள் ஆணையை பெற்றுக் கொடுத்துள்ளனர். அதனை மனதில் வைத்து செயற்பட வேண்டும்.

இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க எண்ணம் இருந்தாலும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை பொறுத்த வரையில் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டியிருப்பதால் தான் இந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே விசேடமாக இந்த இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இவற்றை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.
Previous Post Next Post