யாழ்.குருநகர் இளைஞர் ஹெரோயினுடன் கைது!! - Yarl Thinakkural

யாழ்.குருநகர் இளைஞர் ஹெரோயினுடன் கைது!!

யாழ்.குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குற்றத் தடுப்பு பிரிவினர் அப்பகுதியில் சுற்றிவளைப்பினை நடத்தினர்.

இச் சுற்றிவளைப்பில் குருநகர் நாலடி பகுதியிலிருந்து 20 வயதுடை இளைஞர் ஒருவரிடம் இருந்து 1010 மில்லிக் கிராம் ஹெரோயினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
Previous Post Next Post