சஜித்தின் விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பின் கோரிக்கைகள்!! -எம்.ஏ.சுமந்திரன்- - Yarl Thinakkural

சஜித்தின் விஞ்ஞாபனத்தில் கூட்டமைப்பின் கோரிக்கைகள்!! -எம்.ஏ.சுமந்திரன்-

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாட்டை பேரழிவில் இருந்து பாதுகாக்க வேண்டுமானால் அனைவரும் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது பிரசாரக் கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post