சஜித்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு யாழில் பிரசார கூட்டம்!! - Yarl Thinakkural

சஜித்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு யாழில் பிரசார கூட்டம்!!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று புதன்கிழமை பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி. வி. கே. சிவஞானம் தலைமையில்  இடம்பெற்றது.

நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் , உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார்,  இங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன்,

தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் புளொட்  அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர். 
Previous Post Next Post