சமூக வலைத்தளங்கள் மீது தடை வராது!! -தேர்தல் ஆணையாளர்- - Yarl Thinakkural

சமூக வலைத்தளங்கள் மீது தடை வராது!! -தேர்தல் ஆணையாளர்-

ஜனாதிபதி தேர்தல் காலங்களில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் அளவிற்கு அதன் பாவனையாளர்கள் எங்களை கொண்டு செல்ல வேண்டாம்.

சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டுள்ள விளம்பரங்களை நாளை தொடக்கம் நீக்குமாறு அறவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் இடம்பெறும் மத நிகழ்வுகளின் போது வேட்பாளர்கள் தொடர்பில் கூற வேண்டாம்.

எவ்வாறாயினும், மகிழ்ச்சிக்குரிய விடயம் ஒன்று உள்ளது. நிகம் வெட்டியதாக கூட ஒரு முறைப்பாடும் பதிவாகவில்லை. தூற்றி அச்சுறுத்திய சம்பவங்கள் மாத்திரமே தேர்தல் வன்முறைகளாக பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.
Previous Post Next Post