ராஜபக்சக்கள் மீது மக்களுக்கு இன்னும் அச்சம் உள்ளது!! -அனுரகுமார திசாநாயக- - Yarl Thinakkural

ராஜபக்சக்கள் மீது மக்களுக்கு இன்னும் அச்சம் உள்ளது!! -அனுரகுமார திசாநாயக-

ராஜபக்சக்கள் மீதான அச்சம் இன்றும் மக்களிடம் இன்னமும் உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

இதனால்தான் ராஜபச்சக்களை தோற்கடிக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியல் கலாசாரத்தில் மக்கள் பின்னடைவில் உள்ளனர் என்பதே உண்மையாகும். பிரதான இரு அணிகளின் அரசியல் மேடைகளில் ஒருவருக்கு ஒருவர் அவமதிப்பு, கேவலப்படுத்தல், மோதல்களை ஏற்படுத்தும் அரசியலை செய்கின்றனர்.

இந்த கூட்டங்களை ஆதரிக்கும் மக்கள் உள்ளனர். யாரை விமர்சிக்கின்றோம் என்று தெரியாது விமர்சிக்கும் மக்கள் உள்ளனர். தம்மை தாமே விமர்சிக்கும் வேலைகளிலும் மக்கள் ஆதரவு தெரிவிக்கும் கேலிக் கூத்துக்கள் இடம்பெற்றுவது இம்முறை தேர்தல் மேடைகளில் பார்க்க முடிந்துள்ளது.

எனினும் எம்முடன் உள்ள மக்கள் அவ்வாறு அல்ல. அவர்கள் அமைதியாக சிந்தித்து செயற்படும் தன்மைகள் உள்ளது. எனினும் நாம் மாற்றம் ஒன்றினை உருவாக்கவே களமிறக்கியுள்ளோம்.

நாம் ஆட்சிக்கு வந்தால் செய்ய வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அரசாங்கமாக தீர்மானம் எடுக்கும் வேளையில் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழு செயற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post