கோத்தாவின் வெற்றி உறுதியானது!! -அங்கஜன் இராமநாதன்- - Yarl Thinakkural

கோத்தாவின் வெற்றி உறுதியானது!! -அங்கஜன் இராமநாதன்-

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றி உறுதியாகியுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

அவருடைய உறுதிப்படுத்தப்பட்ட வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அவருக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்கள் திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் சிவலிங்கப்புளியடிப் பகுதியில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post