பொலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சாவு!! - Yarl Thinakkural

பொலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சாவு!!

காலி – கராபிட்டிய பொலிஸாரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

34 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பொத்தல பகுதியைச் சேர்ந்த நபர் கைவிலங்குடன் பரிசோதணைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது தப்பிச் செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன் போதே அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post