யாழில் லஞ்ச்சீற் பாவனைக்கு முழு தடை!! -மீறினால் சட்டம் பாயும்- - Yarl Thinakkural

யாழில் லஞ்ச்சீற் பாவனைக்கு முழு தடை!! -மீறினால் சட்டம் பாயும்-

யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் லஞ்ச்சீற் பயன்படுத்தப்படும் உணவகங்கள் மீது உடன் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் அறிவுறுத்தியுள்ளார்.

மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் உள்ள எந்தவொரு உணவகங்களிலும் லஞ்ச்சீற் பாவிக்ககூடாது என பொது அறிவித்தல் வழங்கப்பட்டு அந்த அறிவித்தலை நடமுறைப்படுத்துவதற்கும் கால அவகாசமும் வழங்கப்பட்டது.

இருப்பினும் லஞ்ச்சீற்பாவனை தொடர்வதால் அதனை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் உணவகங்களில் பரிசோதனை மேற்கொண்டு லஞ்ச்சீற் பாவனையினை மேற்கொள்ளும் உணவங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு நீதிமன்றில் முற்படுத்துமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post