நுணாவிலில் டிப்பர் மோதி கோர விபத்து!! -குடும்பஸ்தர் சாவு- - Yarl Thinakkural

நுணாவிலில் டிப்பர் மோதி கோர விபத்து!! -குடும்பஸ்தர் சாவு-

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை நடந்த டிப்பர் வாகன விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.

கைதடி, நுணாவில் பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றது.யாழ்ப்பாணம், குருநகர் கனகசிங்கம் வீதியைச் சேர்ந்த

எம்.லக்கி (வயது 42) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.தனியார் பாதுகாப்பு சேவையின் மேற்பார்வையாளரான இவர்,

நிறுவன பாதுகாப்புக் கடமைகளை மேற்பார்வை செய்ய இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோதே

விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post