யாழில் ரயிலுடன் மோதியதில் குடும்பஸ்தர் சாவு!! -நீராவியடியில் சம்பவம்- - Yarl Thinakkural

யாழில் ரயிலுடன் மோதியதில் குடும்பஸ்தர் சாவு!! -நீராவியடியில் சம்பவம்-

யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக உள்ள ரயில் கடவையில் ரயிலுடன் மோதுண்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

மேற்படிச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் சந்தையில் மீன் வாங்கிக் கொண்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த உணவக உரிமையாளர் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போது குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார.
Previous Post Next Post