வடமாகாண சபை உறுப்பினர் குகதாஸ் ரி.ஜ.டியால் விசாரணைக்கு அழைப்பு!! - Yarl Thinakkural

வடமாகாண சபை உறுப்பினர் குகதாஸ் ரி.ஜ.டியால் விசாரணைக்கு அழைப்பு!!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.குகதாஸ் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினால் விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவின் 2 மாடிக்கு நாளை 13 ஆம் திகதி புதன்கிழமை வருகைதருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

யாழ்.சுழிபுரத்தில் உள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.குகதாஸின் வீட்டிற்கு கடந்த 9ஆம் திகதி சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கான அழைப்பாணையை அவரிடம் கையளித்துள்ளனர்.

அந்த அழைப்பாணையில் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரினால் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதால் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post