கோத்தாவின் பிரஜாவுரிமை விவகாரம்!! -உண்மையை வெளியிட கோரி உண்ணாவிரதம்- - Yarl Thinakkural

கோத்தாவின் பிரஜாவுரிமை விவகாரம்!! -உண்மையை வெளியிட கோரி உண்ணாவிரதம்-

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ச அமெரிக்க  பிரஜாவுரிமையை உத்தியோக பூர்வமான நீக்கியமைக்கான ஆதாரத்தை உடனடியாக வெளிப்படுத்த கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வணக்கத்திற்குரிய இங்குருவத்தே சுமங்கள தேரர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

எதிர்வரும் 3 நாட்களுக்குள் தான் கோரும் ஆவனம் வெளியிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post