ராஜபக்சக்களுக்கு ஆப்படித்த சந்திரிக்கா!! -சஜித்துடன் ஒப்பந்தம்- - Yarl Thinakkural

ராஜபக்சக்களுக்கு ஆப்படித்த சந்திரிக்கா!! -சஜித்துடன் ஒப்பந்தம்-

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இந்த உடன்படிக்கை சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புதியஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஐக்கிய தேசியமுன்னணியின் அனைத்து கட்சித் தலைவர்களும் இவ்வுடன்படிக்கை கைச்சாத்தில் பங்கேற்றுள்ளனர்.

இரு பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு இடையில் கடும் போட்டி காணப்படும் நிலையில், சந்திரிக்காவின் இவ்வுடன்படிக்கை அரசியல் செயற்பாடு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கும் பிரதான சக்தியாக சந்திரிக்கா செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post