சஜித்தின் ஆதரவு கூட்டத்தை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!! - Yarl Thinakkural

சஜித்தின் ஆதரவு கூட்டத்தை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக யாழ் நல்லூரில் இன்று மாலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்திய பிரசார கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினாலேயே குறித்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிங்கள வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள கூட்டமைப்பு அங்கிருந்து வெளியேறுமாறு கோரியதுடன், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Previous Post Next Post