சஜித்தின் அதிரடி அறிவிப்பு!! - Yarl Thinakkural

சஜித்தின் அதிரடி அறிவிப்பு!!

எனது ஆட்சியில் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய எவருக்கும் எந்தவித பதவிகளும் வழங்கப்படாது என புதிய ஜனநாயக முன்னணியின் சஜித் பிரேமதாச அதிரடி அறிவிப்பினை விடுத்துள்ளார்.

தம்புள்ளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறை வெற்றியின் பின்னர், தேசிய பாதுகாப்பு, சட்டம், ஒழுங்குகள் பதவிக்கான நியமனத்திற்கு மாத்திரமே இதுவரை ஒருவரை பெயரிட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எந்தவொரு காரணத்திற்காகவும், நாட்டில் ஊழல், மோசடியில் ஈடுபட்ட எவருக்கும் பதவி வழங்க தமது பேனையின் மூலம் கையொப்பம் இடப்பட்டு நியமனம் வழங்கப்பட மாட்டாது என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post