முதல் நாளில் 80 சதவீதமான தபால் வாக்குகள் பதிவு!! - Yarl Thinakkural

முதல் நாளில் 80 சதவீதமான தபால் வாக்குகள் பதிவு!!

நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

நேற்று வியாழக்கிழமை தபால் மூலம் வாக்களிக்க தவறியவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 மணி வரையிலான காலப்பகுதியில் தமது அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 80 சதவீதமான தபால் வாக்குகள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
Previous Post Next Post