தேர்தல் விதிமுறை மீறல்கள்!! -70 பேர் கைது- - Yarl Thinakkural

தேர்தல் விதிமுறை மீறல்கள்!! -70 பேர் கைது-

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பிற்காக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று வரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 82 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், 70 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Previous Post Next Post