பூஜை செய்து புதையல் தோண்டிய 6 பேர் கைது!! - Yarl Thinakkural

பூஜை செய்து புதையல் தோண்டிய 6 பேர் கைது!!

வவுனியா நைனாமடு பகுதியில் உள்ள வெற்றுக் காணியில் புதையல் தோண்டிய 6 பேரை புளியங்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து புதையல் தோண்டும் ஆயுதங்களும், புஜை பொருட்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு 11.30 மணியளவில் புளியங்குளம் நைனாமடு பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றில் 6 பேரடங்கிய குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக புளியங்குளம் பொலிசாருக்கு இரகசியத்தகவல் கிடைத்துள்ளது.

இத்தகவலைக் கொண்டு அங்கு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் புதையல் தோண்டிய 6 பேரையும் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளதுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மண்வெட்டி. பூஜைப் பொருட்கள் , மோட்டார் சைக்கிள் , முச்சக்கரவண்டி என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
Previous Post Next Post