தேர்தல் பாதுகாப்புக்காக 60 ஆயிரம் பொலிஸார் களத்தில்!! - Yarl Thinakkural

தேர்தல் பாதுகாப்புக்காக 60 ஆயிரம் பொலிஸார் களத்தில்!!

ஜனாதிபதி தேர்தல் தினத்தில் பாதுகாப்பு பணிக்காக 60 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

12 ஆயிரத்து 856 வாக்குச் சாவடிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, 12 ஆயிரத்து 856 வாக்குச் சாவடிகளில் 25 ஆயிரத்து 712 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாடு பூராகவும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளையும் உள்ளடக்கிய வகையில் மூன்றாயிரத்து 43 பொலிஸ் நடமாடும் சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், பொலிஸ் நடமாடும் சேவைக்காக 6 ஆயிரத்து 86 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

43 வாக்கு எண்ணும் மையத்திற்காக இரண்டாயிரத்து 193 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post