ரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்குப் தாக்கல்!! - Yarl Thinakkural

ரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்குப் தாக்கல்!!

சட்டமா அதிபர் நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி தன்னுடைய தனிப்பட்ட தேவைக்காக பயணித்துக் கொண்டிருந்த ரங்கா வவுனியா-செட்டிக்குளம் வைத்தியசாலையின் மதிலில் தன்னுடைய வாகனத்தை மோதினார்.

இதன் போது பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பலியாகியிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பிலேயே சட்டமா அதிபரின் ஊடாக மேற்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post