பாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு!! -உடன் அமுலுக்கு வருகிறது- - Yarl Thinakkural

பாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு!! -உடன் அமுலுக்கு வருகிறது-

அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையால் அதிகரிக்கப்பட்ட பாணியின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 ரூபாவால் மீண்டும் குறைக்கப்படுவதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலையை குறைப்பதாக கோதுமை மா நிறுவனங்கள் எழுத்து மூலம் அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை நண்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post