3 மாதங்களின் பின் வைத்தியர் சிவரூபன் நீதிமன்றத்தில் ஆஜர்!! - Yarl Thinakkural

3 மாதங்களின் பின் வைத்தியர் சிவரூபன் நீதிமன்றத்தில் ஆஜர்!!

பயங்கரவாத  குற்றத்தடுப்பு  பிரிவினரால் கைது செய்யப்பட்ட பளை வைத்திய  சாலையின் சட்ட  வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் 3 மாதங்களுக்கு  பின்னர் கொழும்பு நீதவான்    நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


தமிழீழ   விடுதலைப்   புலிகளை   மீளவும் உருவாக்க   முயட்சித்தார்    என்ற குற்றச்சாட்டின்   கீழ் கைது செய்யப்பட்ட அவர்    நீதிமன்றத்தில்   முற்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்கள்   விளக்கமறியலில்   வைக்க     நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


வைத்தியர் சார்பில்   ஜனாதிபதி சட்டத்தரணி     நிஹால் ஜயவர்தன     மற்றும்     சட்டத்தரணி       பத்மசிறி பண்டார உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post