ஜனாதிபதி தேர்தல்!! -இதுவரை 3083 முறைப்பாடுகள்- - Yarl Thinakkural

ஜனாதிபதி தேர்தல்!! -இதுவரை 3083 முறைப்பாடுகள்-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் 3083 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் நேற்று (6) வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 2959 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 25 முறைப்பாடுகளும் மற்றும் 99 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று (5) பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 100 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post