விபச்சார நிலையம் முற்றுகை!! -3 பெண்கள் கைது- - Yarl Thinakkural

விபச்சார நிலையம் முற்றுகை!! -3 பெண்கள் கைது-

தெஹிவளை - கட்டுவான பகுதியில் விபச்சார நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டதில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்றும் போர்வையில் விபச்சார நிலையம் இயங்கி வருவதாக கிடைத்த தகவலை கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையிலேயே மேற்படி கைது நடந்துள்ளது.

தெஹிவளை - கட்டுவான பகுதியில் நேற்று கல்கிஸ்ஸை குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்ட உத்தரவுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது முகாமையாளர் பெண்ணொருவரும், விடுதியை நடத்துவதற்காக உதவி ஒத்தாசைகளை வழங்கிய இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் , மாத்தறை மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29 தொடக்கம் 34 வயதுக்கு இடைப்பட்ட 3 பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்ற விசாரணை பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post