குளத்தில் மூழ்கிய 3 சிறுவர்கள்!! -ஒருவர் சடலமாக மீட்பு: 2 பேரை காணவில்லை- - Yarl Thinakkural

குளத்தில் மூழ்கிய 3 சிறுவர்கள்!! -ஒருவர் சடலமாக மீட்பு: 2 பேரை காணவில்லை-

மட்டக்களப்பு, ஆரையம்பதி திருநேற்றுக்கேணிப் பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி காணாமற்போன 3 சிறுவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குளத்தில் காணாமல் போன ஏனைய இருவரையும் தேடும் பணியில் அப்பகுதி மக்கள் முன்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் புதிதாகத் தோண்டப்பட்ட குளத்தில் இன்று திங்கட்கிழமை காலை விளையாடிக் கொண்டிருந்த சுமார் 11, 14 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் குளத்து நீரில் மூழ்கியுள்ளனர்.

அவர்களை தேடும் பணிகள் ஊர் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத் தேடுதலின் போது ஒரு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post