யாழில் தேவாலயத்திற்கு அருகில் 2 கிலோ வெடி பெருட்கள் மீட்பு!! - Yarl Thinakkural

யாழில் தேவாலயத்திற்கு அருகில் 2 கிலோ வெடி பெருட்கள் மீட்பு!!

யாழ்.பாசையூர் அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் கடற்கரை ஓரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ வெடிமருந்து விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது இந்த வெடிமருந்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

மேற்படி வெடிமருந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைக்காக கொண்டு வரப்பட்ட இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வெடிமருந்து தொடர்பில் இதுவரை எந்த சந்தேகநபர்களும் கைது செய்யப்படவில்லை.
Previous Post Next Post