யாழ்ப்பாணம் தீவக மீனவர் ஒருவருக்கு
2 ஆயிரம் கிலோ கிராம் எடை கொண்ட தண்ணீர் சுறா ஒன்று வலையில் மாட்டியுள்ளது.
யாழ்.தீவனம் நயினாதீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவருக்கே அந்த சுறா மீன் பிடிபட்டுள்ளது.
குறித்த மீனவர் மீன்டிபியில் ஈடுபட்டிருந்த வேளை வளமைக்கு மாறாக அதிக எடை கொண்ட மீன் ஒன்று மாட்டியிருப்பதை அவதானித்துள்ளார். இது தொடர்பில் சக மீனவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ஏனைய சில மீனவர்கள் அங்கு வந்த போதும், வலையில் மாட்டிய மீனை படகில் ஏற்ற முடியாததால் அதை கரைக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கையில் அவர்கள் அனைவரும் இணைந்து மேற்கொண்டனர்.
மிகுந்த சிரமத்திற்கு மத்தில் அந்த மீன் கரைக்கு இழுத்துவரப்பட்ட போது, அது சுறா இனத்தை சேர்ந்த தண்ணீர் சுறா என்று அழைக்கப்படும் மீன் இனம் என்று தெரியவந்துள்ளது.
சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான எடை கொண்ட சுறா அது என்றும், அதை உணவுக்காக பயன்படுத்த முடியாது என்பதால் மீண்டும் அதை கடலிலேயே விட்டுவிட்டதாக மீனவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர்.