பிறந்த நாளில் விபத்து: 2 வயது குழந்தை சாவு!! -அனாதை இல்லத்திற்கு தானம் செய்ய போன போது சம்பவம்- - Yarl Thinakkural

பிறந்த நாளில் விபத்து: 2 வயது குழந்தை சாவு!! -அனாதை இல்லத்திற்கு தானம் செய்ய போன போது சம்பவம்-

தனது பிறந்த தினத்தில் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு தானம் கொடுக்க சொன்ற 2 வயது குழந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வெல்லவாய, தனமல்வில பிரதான வீதியின் ஆரியசிறி பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை குறித்த விபத்துச் சம்பவம் நடந்துள்ளது.

தனமல்வில பகுதியில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புளத்சிங்கள பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அம்மா, அப்பா, பாட்டி மற்றும் உயிரிழந்த குழந்தை குறித்த வாகனத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழந்தையின் பிறந்த நாள் இன்று என்பதினால் வெல்லவாய பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றிற்கு தானம் வழங்க சென்ற சந்தர்ப்பர்த்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வாகன ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இவ்வாறு விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post