யாழில் 16 வயது சிறுமி துஸ்பிரயோகம்!! -பேருந்திற்கு காத்திருந்தவருக்கு கொடுமை- - Yarl Thinakkural

யாழில் 16 வயது சிறுமி துஸ்பிரயோகம்!! -பேருந்திற்கு காத்திருந்தவருக்கு கொடுமை-

யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதியில் வைத்து 16 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் உட்படுத்தி குற்றச்சாட்டில் அவ்விடுதியின் உறுதிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றும் பணியாளர் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது.

யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் வந்த நபர் ஒருவர் அவரிடம் ஆசை வார்த்தைகளை பேசி சிறுமியை தன்பக்கம் ஈர்த்துள்ளார்.

சிறுமியை தன்பக்கம் ஈர்த்த அந்த நபர் நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்கு அச் சிறுமியை அழைத்துச் சென்று அங்கு அறை ஒன்றை வாடகைக்கு பெற்று சிறுமியுடன் தங்கியுள்ளார். இதன் போது குறித்த நபர் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

பாலியல் துஸ்பிரயோகம் செய்த பின்னர் குறித்த நபர் அந்த அறையிலேயே சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளார்.

மிக நீண்ட நேரமாகியும் அறைக்கு மீண்டும் குறித்த நபர் வராததால் விடுதி உரிமையாளர்களுடன் குறித்த சிறுமி தொடர்பு கொண்ட போது அந்த நபர் தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பண்ணையில் உள் மகளீர் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த விடுதியின் உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றும் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
Previous Post Next Post