16 கிலோ கேரள கஞ்சாவுடன் கிளிநொச்சி இளைஞர் கைது!! - Yarl Thinakkural

16 கிலோ கேரள கஞ்சாவுடன் கிளிநொச்சி இளைஞர் கைது!!

கிளிநொச்சி சேவியர்கடை சந்தி பகுதியில் வைத்து 16 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கையும் மெய்யுமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியை சேர்ந்தவரே மேற்படிச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் ஆவர்.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடந்த திடீர் சோதணை நடவடிக்கையின் போது இக் கைது நடைபெற்றுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 16 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபரை மாங்குளம் பொலிசார் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post