யாழ் - சென்னை விமான சேவை 10 ஆம் திகதி முதல்!! - Yarl Thinakkural

யாழ் - சென்னை விமான சேவை 10 ஆம் திகதி முதல்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்காக வர்த்தக விமான சேவைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

நாள்தோறும் நடைபெறும் இவ்விமான சேவையூடாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 32 தொடக்கம் 50 நிமிடங்களில் சென்னை விமான நிலையத்தை சென்றடையலாம் என்றுமு; அவ்வமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவு முகவர் மூலம் விமானங்களின் அந்தந்த வலைத்தளங்களிலிருந்து மக்கள் தங்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

இந்திய உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்தின் கீழ் உள்ள தூதரக பொது அலுவலகத்தில் இருந்து இதற்கான விசா அனுமதியினை பெற்றுக் கொள்ளவும் முடியும்.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்துக்கிடையில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
Previous Post Next Post