தேர்தல் நாளிலிருந்து 1 வாரத்தில் 45 வன்முறைகள்!! - Yarl Thinakkural

தேர்தல் நாளிலிருந்து 1 வாரத்தில் 45 வன்முறைகள்!!

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற 16 ஆம் திகதியில் இருந்து இன்றுவரை 45 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதிகளவாக 35 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளது என்றும் அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 17 தேர்தல் மாவட்டங்களிலும் 45 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவான வன்முறைகள் பதிவாகியுள்ளன. இம்மாவட்டத்தில் 9 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பதுளை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் 12 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் புத்தளம், கேகாலை மற்றும் திகாமடுல்ல ஆகிய பிரதேசங்களில் தலா நான்கு வன்முறைகள் வீதம் 12 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் 5 வன்முறைகள் பதிவாகியுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் மூன்று வன்முறை சம்பவங்களும், மொனராகலை , மாத்தளை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் 6 வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

எனினும் கொழும்பு , யாழ்ப்பாணம், மாத்தறை, நுரவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் எவ்வித வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Previous Post Next Post