கொள்ளையிட்ட மக்களின் பணம் மீளவும் ஒப்படைக்கப்படும்!! -சூழுரைக்கும் அனுரகுமார- - Yarl Thinakkural

கொள்ளையிட்ட மக்களின் பணம் மீளவும் ஒப்படைக்கப்படும்!! -சூழுரைக்கும் அனுரகுமார-

நான் ஜனாதிபதியாக வந்தால் கடந்த ஆட்சியாளர்களால் மக்களிடம் இருந்து அனியாயயமாக கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அனுரகுமார திசாநாயக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அனுராதபுரம் தம்புத்தேகமவிம் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்:-
நாட்டில் கல்வி, சுகாதாரம் என அத்தியாவசிய துறைகள் வீழ்ச்சி கண்டுள்ளது. ஊழல் நிறைந்த ஆட்சியை மட்டுமே ஆட்சியாளர்கள் முன்னெடுத்து செல்கின்றனர். இன்று நாட்டின் விவசாயம் நாசமாக்கப்பட்டுள்ளது. இயற்கை உரங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் நச்சு உரங்களை இறக்குமதி  செய்து நாட்டின் விவசாயத்தை நாசமாக்கியுள்ளனர்.  எமக்கு மரணம் என்ற போராட்டம் இருந்தது, ஆனால் அடுத்த பரம்பரை அனாவசியமாக உயிரிழக்க நாம் இடமளிக்க கூடாது.

நாம் யாரையும் பழிவாங்க ஆட்சியை கேட்கவில்லை. நாம் இந்த நாட்டினை மாற்ற வேண்டும் என்ற உண்மையான எண்ணத்துடன் முன்வந்து ஆட்சியை கேட்கின்றோம். அது மட்டும் அல்ல இனியும் இந்த நாட்டில் களவுகள், ஊழல்கள் குற்றங்கள் இடம்பெறாத வண்ணம் நாம் மாற்றம் ஒன்றினை உருவாக்க வேண்டும். பிரதான கட்சிகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும் களவுகளை கைவிடப்போவதில்லை.

ஆகவே ஒரு தடவை எமக்கு ஆட்சியை கொடுத்துப்பாருங்கள். முதலாவதாக இந்த நாட்டில் களவுகளை நிறுத்துவோம். அடுத்ததாக இந்த நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் சொத்துக்களை மீண்டும் மக்கள் மயமாக்குவோம் என்றார். 

Previous Post Next Post