மோட்டார் சைக்கிலை மோதி தள்ளிய இராணுவ வாகனம்!! - Yarl Thinakkural

மோட்டார் சைக்கிலை மோதி தள்ளிய இராணுவ வாகனம்!!

கொக்காவில் ஏ-9 வீதியில் இராணுவ வாகனமும், மோட்டார் சைக்கிலும் மோதிக் கொண்ட விபத்துச் சம்பவத்தில் பொது மகன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியின் கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரே திசையில் பயணித்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீது ரக் மோதியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மோட்டார் சைக்கிளை முந்தியவாறு சமிக்ஞையை ஒளிரவிடாது இராணுவ முகாமிற்குள் ரக் வாகனத்தை செலுத்த முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
Previous Post Next Post