கிளிநொச்சியில் முன்னாள் போராளி வீடு சோதணை!! -பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு- - Yarl Thinakkural

கிளிநொச்சியில் முன்னாள் போராளி வீடு சோதணை!! -பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு-

திருமலையில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியான இளைஞனின் வீட்டிலிருந்து பெரும் தொகையான வெடிபொருட்கள் மற்றும் கருவிகள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இன்று சனிக்கிழமை கிளிநொச்சி அம்பாள் குளத்தில் உள்ள அவரின் வீடு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன் போது ரி-56 ரக துப்பாகழ ஒன்றும், சிறய ரக துப்பாக்கிகள் 3, கைக்குண்டுகள் 5, ரி-57 துப்பாக்கி ரவைகள் 150, சிறிய ரக துப்பாக்கி ரவை 45, லப்ரப் 1, தொலைபேசிகள் 4, எம் கே.எம் ஜி ரவைகள் 6, வெடிப்பு கருவிக்கான வயர்கள், வெடிப்பு கருவிகள் 4, ஜிபிஎஸ் 1, தானியக்கிகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post