யாழில் பிரச்சாரத்தில் இறங்கிய மகேஸ் சேனாநாயக்கா!! - Yarl Thinakkural

யாழில் பிரச்சாரத்தில் இறங்கிய மகேஸ் சேனாநாயக்கா!!

ஐனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்கா யாழில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

சிவில் அமைப்புக்களின் சார்பில் பொது வேட்பாளராக களமிறங்கி உள்ள மகேஸ் சேனாநாயக்க தனது தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதற்கமைய நேற்றைய தினம் பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post