கோட்டா ஆதரவாளர்கள் பொலிஸாருடன் மோதல்!! -பதற்றத்தால் தேர்தல் அலுவலகம்- - Yarl Thinakkural

கோட்டா ஆதரவாளர்கள் பொலிஸாருடன் மோதல்!! -பதற்றத்தால் தேர்தல் அலுவலகம்-

வேட்புமனுத்தாக்கலின் போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு முன்னால் கூடிய கோட்டாபாயவின் ஆதரவாளர்களால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு பெருமளவில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை காலையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆணைக்குழுவின் முன்னிலையில் குழுவியிருந்த கோத்தபாயவின் ஆதரவாளர்கள் குழப்பம் விளைவித்துள்ளளனர்.

தேர்தல் ஆணைக்குழு வளாகத்திற்குள் தம்மை அனுமதிக்குமாறு கோரி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத் தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post