வடக்கு கபடி அணிக்கு இந்தியாவில் பயிற்ச்சி!! - Yarl Thinakkural

வடக்கு கபடி அணிக்கு இந்தியாவில் பயிற்ச்சி!!

வடக்கு மாகாணத்தை சேர்ந்த கபடி அணியினை இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிவன் அறக்கட்டளை ஸ்தாபகரும் மக்கள் முன்னேற்றக் கூட்டணயின் செயலாளர் நாயகம்  கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் திறமைவாய்ந்தவர்கள் அவர்களுக்கு சரியான வசதி வாய்புகள் இல்லாத காரணத்தினால் அவர்களால் முன்னுக்கு வரமுடியாமல் இருக்கின்றது எனவே நாங்கள் நிச்சயாமாக அவர்களுக்கு உரிய உதவியை செய்து அவர்களை உச்சத்துக்கு கொண்டு போவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய கபடி அணியில் இடம்பிடித்துள்ள யாழ் மாவட்டத்தினை சேர்ந்த நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி செல்வி பிரியவர்ணா மற்றும் இளவாலை கான்வென்ட் பாடசாலை மாணவி டிலக்சனா இருவரும் அண்மையில் தென்கொரியாவில் நடைபெற்ற தேசிய கபடி போட்டிகளில் பங்குபற்றினர்.

இவ் போட்டியில் இலங்கை அணி மூன்றாம் இடத்தை பெற்றமைக்கு முக்கிய வீரர்களாக பிரியவர்ணா, டிலக்சனா பங்காற்றியிருந்தனர்.


இவர்கள் போட்டிக்காக வெளிநாடு செல்வதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. அவர்களின் குடும்ப வறுமை நிலமைகளாலும் முதல் அனுபவம் என்பதாலும் அவர்களால் மேற்கொண்டு செயற்பட முடியவில்லை.

இந்நிலையில் சிவன் அறக்கட்டளை ஸ்தாபகரும் மக்கள் முன்னேற்றக் கூட்டணயின் செயலாளர் நாயகமும் திரு.கணேஸ்வரன் வேலாயுதம் அவர்களை தொடர்பு கொண்டு தமது நிலைமைகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர்.

அவர்களின் நிலமைகளை கருத்தில் கொண்டு பயிற்சி பெற்று கொண்ட காலங்களிலும் இவர்களுக்கான நிதி உதவியை வழங்கியதுடன் அவர்கள் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தேவையான பொருட்கொள்வனவிற்கான நிதியுதவியினையும் இதர பொருள் உதவிகளையும் அவர் உடனடியாக வழங்கியிருந்தார்.
Previous Post Next Post